பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா டி கயிறு தாண்டிக் குதித்தல்,

சில குறிப்புகள்: கண்ணாடி முன்னே நின்று கொண்டு, கயிறு தாண்டிக் குதிக்கும் உங்கள் செயல், காட்சிக்கு இனிமையாக, இன்னும் கவர்ச்சியாகவே இருக்கும். தாண்டிக் குதிப்பது என்பது எல்லோராலும் முடிந்ததுதான். ஆனால், 35 வயதைக் கடந்தவர்கள், இந்தப் பயிற்சியை தொடங்குவதற்கு முன், சற்று சிந்திக்க வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள், மூட்டுவலிக் காரர்கள். தங்கள் குடும்ப வைத்தியரைக் கலந்தாலோசித்தபிறகு தான், தாண்டிக் குதிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். தாண்டிக் குதிக்கும்போது, கெண்டைக்கால் தசைகளில் கொஞ்சம் வலி ஏற்பட்டு, பயிற்சியை நிறுத்தக் கோரிடும். அப்பொழுது, ஓய்வுதந்து மீண்டும், பயிற்சியை தொடரலாம். - கயிற்றின் நீளம் சுமார் 9 1/2 அடி வைத்துக் கொள்ளலாம். கைப் பிடி பிடிப்பதற்கு ஏற்ற கனம் கொண்டதாக இருந்தால், பயிற்சிக்கு ஏற்றதாகவும், இயல்பாகவும் இருந்து உதவும். அணிந்து கொள்ளும் ஆடைகள், உடலை இருக்கமாக பிடித்திருக்காமல் இருப்பது நல்லது. காலில் காலணிகள் அணிவது சிறந்தது.