பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பார்க்கவும்). காலைத் தூக்கிக் குதிக்கும்போது, காலில் முன்புற பாதத்தில் தான் ஊன்றி நிற்க வேண்டும். அதாவது இரண்டு கால்களாலும் துள்ளிக் குதிக்கும்போது, வலது காலை பின்புறம் கொண்டு வந்து, இடது காலால் மட்டும் நிற்கவும். (1.இ) மீண்டும் கயிற்றை சுழற்றி, முன் புறமாகக் கொண்டு வருகிறபோது, இப்போது இடது காலை உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு வந்து, வலது காலை தரையில் ஊன்றவும். இப்படியாக, ஒரு கால் மாற்றி ஒரு காலால் துள்ளிக் குதித்து, கயிறு தாண்டிக் குதிக்கவும். இது நின்று கொண்டே தாண்டிக் குதிக்கும் பயிற்சியாகும்.2அ,2ஆ2இ. ஆகிய மூன்று படங்களும்,