பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 133 6. இடுப்பு, வயிறு மட்டுமா தடிக்கிறது? கன்னத்திற்குக் கீழே சதைகள் தொங்கிக் காட்டுகின்றன. 7.தோலில் எண்ணெய் பசைகாய்ந்து, வறட்சியாகித் தெரிகிறது. என்ன செய்யலாம்? இப்படியாக மாற்றங்கள் உடலில் எழுகின்றபோது, அவற்றைத் தடுக்கலாம். ஆனால் நிறுத்தி வைக்க முடியாது. - ஆமாம்; வயதாவதை கொஞ்ச காலத்திற்கு ஒத்திப் போடலாம். தள்ளிவைக்கலாம். முடியும் என்று சொல்லி வைக்கலாம். - - எப்படி? - சிறு சிறு உடற்பயிற்சிகளை, தொடர்ந்தாற்போல் தினமும் செய்து கொண்டு வந்தால் போதும்! விசையான தசைகள்: மனித உடலில் அதிக சக்தியை விளைவிப்பது தசைகள் தான். உடல் நன்றாக இயங்க உதவுவதும் அவைகள் தான். உடலில் வலிமை, உடல் இயங்கும் வேகம்; உடல் நீடித்துழைக்கும் ஆற்றல் எல்லாமே ஆளுக்கு ஆள், மனிதருக்கு மனிதர் மாறித்தான் இருக்கிறது. பெண்கள் என்றால் வலிமையில் குறைந்தவர்களாக இருந்தாலும், வாழ்நாளில் அதிகம் பெற்று வாழ்கின்றார்கள்.