பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ise டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'நாற்பது வயதுக்கு மேல் பயிற்சி எதற்கு?’ என்று கேட்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாற்பதுக்கு மேல் தான் வாழ்க்கையே தொடங்கு கிறது என்பது ஒரு மேல் நாட்டுப் பழமொழி. நாலும் முடிந்து விட்ட வயதல்லவா என்று நம்மவர்கள் சோக கீதம் பாடுகிற நிலைமையும் இங்கே உண்டு. உடல் தளரத் தொடங்குகிற நேரம். மனம் பக்குவப் பட்டிருக்கிற சமயம். குடும்பத்தில் ஈடுபாடு, மிகுதியாகிக் கொண்டிருக்கிற வேளை. தளர்கின்ற உடலைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? குடும்பச் சுமையை குதுகலமாக ஏற்கும் வலிமையைப் பெற வேண்டாமா? அனுபவம் மிகுந்த வாழ்க்கைச் சுவையை அனுபவிக்க வேண்டாமா? அதற்காகத் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறோம். உடைகளை கசக்கும்போது, துணிகள் தூய்மை பெறுகின்றன. உறுப்புக்களை இயக்கும் போது, உடலும் தூய்மையும் ஆற்றலும் பெறுகிறது. அதற்கான அவசியமான சில பயிற்சிகளைக் காண்போம். சில குறிப்புக்கள்: - 1. பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பாக, எந்த நேரத்தில் செய்ய வேண்டும் (காலையிலா? மாலையிலா?) என்பதைத் தீர்மானமாக முடிவு செய்திட வேண்டும்.