பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 143 அப்படி இல்லாமல், மிக மிக எளிய பயிற்சிகளை இங்கே தந்திருக்கிறோம். இடுப்பைச் சிறிதாக்கி, இன்பத்தைப் பெரிதாக்கிக்கொள்ளவும். பயிற்சி: 1 1. கால்களை முடிந்த வரை அகலமாக வைத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தலைக்கு மேலே முடிந்த வரை, உயர்த்திக் கொண்டு, முதலில் நிற்கவும். 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, ഖളെ ாலை குனிந்து தொட்டு விட்டு, தலைக்கு மேலே ாககளைக் கொண்டு வந்தவுடன் மூச்சை விடவும். 3. பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு, இடது காலைக் குனிந்து தொடவும். கைகளை உயர்த்திய பிறகு, மூச்சை விடவும். - ஒவ்வொரு காலுக்கும் 10 தடவை செய்யவும். பயிற்சி: 2 1. கால்களை அகலமாக, விரித்து வைத்து கைகளை பக்கவாட்டில் விரித்துக் கொண்டு நிற்கவும். 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, வலது கையால் இடது காலைத் தொடவும். இடது கை, இடது காலுக்கு நேராக தலைக்கு மேலாக விறைப்பாக உயர்த்தி இருக்கவும். 3. பிறகு நிமிர்ந்து நின்று, மீண்டும் குனிந்து, இடது கையால் வலது காலைத் தொடவும். 4. பிறகு விரைப்பாக வந்து நின்ற பிறகு, மூச்சை விடவும். -