பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 11 வாழ்விலே இணைப்பு தோன்றினாலும், வடிவத்தில், வாழ்க்கை அமைப்பில் செழிப்பு இருக்கின்றதே! மனித வாழ்க்கையில் நோக்கம் உண்டு. நோக்கத்தை நல்ல முறையில் நிறைவேற்றும் ஊக்கம் உண்டு. பக்கத்தைத் தொடர்ந்து நடத்த உற்சாகம் உண்டு. இதற்கிடையிலே எழுகின்ற, தடுக்கின்ற ஏக்கம், தூக்கம், தேக்கம் என்று எத்தனையோ உண்டு. இருந்தாலும், மனிதன் பாடுபடுகிறான், பயனடைகிறான், மிருகங்கள் வாழ்க்கையில் இந்த பண்பு இல்லையே! எண்ணுவதற்கு இதயம்! இயம்புவதற்கு மொழி! இனிமைபெறச் சிரிப்பு என்னவென்று உணரப் பகுத் தறிவு! இத்தனைக்கும் சொந்தக்காரன் மனிதன். இவை இல்லாததால்தான் மிருகங்களை வாயில்லா ஜீவன்கள் என்கின்றனர். நாமெல்லாம் வாயுள்ள ஜீவன்கள். இத்தனைப் பெருமைக்கும் காரணம்-நமக்குக் கிடைத்திருக்கின்ற அழகான, அருமையான, அற்புதமான உடல்தான். உடல் இல்லாவிட்டால் வாழ்க்கையேது? நல்ல வாழ்க்கைக்கு நல்ல உடல் வேண்டுமே! சுவற்றை வைத்துத்தானே சித்திரம்! வீணை நரம்புகளின் திறத்தில்தான் தரமான இசைகிளம்பும், ஆற்றல் மிக்க மனித உடலின் வளத்தில் தான் இன்பம் எழும்பும். -