பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒவ்வொரு காலுக்கும் 10 தடவை செய்யவும். பயிற்சி: 3 1. 12 அங்குலம் இடை வெளி இருப்பதுபோல, கால்களை அகலமாக விரித்து, கைகளை நெஞ்சுக்கு முன்புறமாக விரைப்பாக, நீட்டிக் கொண்டு நிற்கவும். - 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, இரு கைகளையும் வலப் பக்கமாகக் கொண்டு வந்து. முடிந்த வரை முதுகுப் புறம் கொண்டு செல்லவும். இடுப்பை நன்றாகச் சுழற்றவும். 3. அது போல, இடது புறமும் கைகளை நீட்டி இடுப்பைச் சுழற்றிச் செய்யவும். இது போல் 20 முறை செய்யவும். பயிற்சி: 4 1. மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்புறமாகக் கொண்டு சென்று, கால்களையும் நீட்டி இறக்கவும். - 2. மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு, கைகளைக் கொண்டு வந்து, கால் விரல்களைத் தொடவும். 3. படுத்து எழுந்து வருகிறபோது, கால்கள் தலையிலே இருக்க வேண்டும். விரல்களைத் தொடுகிறபோது, முழங்கால்களை மடக்காமல் தொடவும். முதலில் சிரமமாக இருக்கும். செய்யச் செய்யப் பழகிப் போகும். இதுபோல் 20 தடவை செய்யவும்.