பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 145 பயிற்சி: 5 1. மல்லாந்து படுத்துக் கொண்டு, முன்போல் இருக்கவும், ஆனால், கைகளை பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொள்ளவும். - 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, இருகால் ளையும் சேர்த்துத் தூக்கி, நீட்டியிருக்கும் இடது கையைத் தொடவும். இடுப்பை நன்கு மடக்கி முழங்கால் களை மடக்காமல், விரைப்பாகக் கொண்டுபோய்த் தொடவும். 20 தடவை செய்யவும். பயிற்சி:6 1. மல்லாந்து படுத்து, கால்களை விரைப்பாக நீட்டி, ாககளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் சேர்த்தாற் போல் தூக்கி, முடிந்த வரை மேற்புறமாக 90 டிகிரிக்கு கொண்டு வந்து, பிறகு கால்களை 45 டிகிரி அளவில் இறக்கி, மேலும் கீழுமாகக் கொண்டு வந்து தரையில் படாமல் நிறுத்தி, பிறகு 45 டி கிரி, 90 டிகிரி அளவுக்கு உயர்த்தவும். ஒரே மூச்சில் மெதுவாகவே, பல முறை செய்து விட்டு, கால்களைத் தரைக்குக் கொண்டு வந்த பிறகு, முச்சு விடவும். - 20 முறை செய்யவும். பயிற்சி: 7 1. குப்புறப் படுத்துக் கொள்ளவும், முன் பாதங்கள் கரையில் படுவது போல, முகம் தரையில் இருப்பது போல