பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 147 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, கைகளை விரைப்பாக வருகிற முறையில் உயர்த்தி, நெஞ்சு ாகத்தை உயர்த்தி, முகத்தை முன்னோக்கிப் பார்ப்பது போல் வைத்திருக்கவும். முதல் நிலைக்கு வந்ததும் மூச்சை விடவும். புஜங்காசனம் செய்வது போல்தான் இந்தப் பயிற்சியும். - 20 தடவை செய்யவும். பயிற்சி: 10 1. மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கால்களை விரைப்பாக நீட்டி வைத்துக் கொண்டு, கைகளை பக்கவாட்டில் வைத்திருக்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, மேற்புறமாக எழுந்து வந்து, கைகளால் முழங்கால் பகுதியைத் தொட வேண்டும். அதாவது, முதுகுப்புறம் சற்று முன்னோக்கி வளைய தலையும் மேல் நோக்கி வரும். ஆனால், கால்களை மடக்காமல், விறைப்பாக வைத்திருக்கவும். மீண்டும் முதல் நிலைக்கு வந்து, மூச்சை விடவும். 20 தடவை செய்யவும். குறிப்பு: 20 தடவை என்று இங்கே கூறியிருக்கிறோம். முடிந்தால் தான் 20 தடவை. முடியா விட்டால், கஷடப்பட்டுக் கொண்டு, பயிற்சிகளை செய்து விடக் கூடாது.