பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 149 rーーーーーーーーーエーーーーーーい | 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான பயிற்சிகள் ! பயிற்சி: 1 1. கால்களை அகலமாக வைத்து, நிமிர்ந்து நின்று கொள்ளவும், பக்கவாட்டில் தொடைப் பகுதியில் கை இருக்குமாறு இயல்பாகத் தொங்க விடவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, மார்பில் படுவது போல, தலையைத் தொங்க விட்டு, தொட்டு விடுமாறு முன்புறமாகக் கொண்டு வரவும். 3. முன்புறத்திலிருந்து இடப் புறத்தோளைத் தொடுமாறு கொண்டு சென்று, பிறகு மார்புப் புறத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் வலது புறத் தோளைத் தொடுமாறு கொண்டு சென்று, பிறகு முன்புறமாக வந்து, அதன் பின்னர், தலையை நிமிர்த்தி விடவும். பிறகு மூச்சை விடவும். (20 முறை செய்யவும்) பயிற்சி: 2 1. கால்களை இயல்பாக அகலமாக வைத்துக் கொண்டு, தலைக்கு மேலாக இரண்டு கைகளையும், விறைப்பாக உயர்த்தி வைக்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கைகளை மேலும் கீழுமாக விரைவாக வீசவும், (Swing) 3. முன்புறமாக கைகள் வருவது போல சுழற்றுவதை 10 தடவை செய்து, மூச்சு விடவும்.