பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 4. பிறகு நன்கு மூச்சிழுத்துக் கொண்டு, பின்புறமாக கைகளை, மேலும் கீழுமாக 10 தடவை சுழற்றி, பிறகு மூச்சு விடவும். பயிற்சி: 3 முன் பயிற்சி போலவே, சாதாரணமாக, விறைப்பாக நிமிர்ந்து நிற்கவும். கயிறு தாண்டிக் குதிப்பது போல (கற்பனையாக நினைத்துக் கொண்டு) தாண்டித் தாண்டிக் குதிக்கவும். ஒவ்வொரு தடவையும் உயரமாகக் குதிக்கிற போது, நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும். பிறகு மூச்சு விடவும். (20 தடவை) பயிற்சி: 4 1. ஓடுவது போல, கைகளை முன்புறமாக, நெஞ்சுக்கு அருகே, இயல்பாக வைத்துக் கொள்ளவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, நின்ற இடத்திலேயே ஓடுவது போல, கால்களை உயர்த்திக் குதித்து ஓடவும். 3. முழங் கால்கள் மார்பளவு உயரம் வருவது போல, உயர்த்திக் குதித்து ஓடவும். - வேண்டியபோது, நன்றாக ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொள்ளவும். பயிற்சி: 5 1. நன்றாக வசதியாக இருப்பது போல, கால்களை அகலமாக விரித்து வைத்து நிற்கவும். கைகளை தலைக்கு