பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய பிறகு, இடது காலைத் தொடும் பயிற்சியைச் செய்யவும் (20 தடவை) - பயிற்சி: 7 1. கால்களை முடிந்த வரை அகலமாக வைத்து, கைகள் இரண்டையும் பக்க வாட்டில் நீட்டி, விரித்துக் கொண்டு நிற்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, இடது கை இருக்கும் பகுதிக்கு வலதுகை வருவது போலவும், வலது கை பகுதிக்கு இடது கை வருவது போலவும் கொண்டு வரவும். இடுப்புப் பகுதியை நன்கு சுழற்றுகிறபோதுதான் இதைச் செய்ய முடியும். பல முறை இப்படியும், அப்படியும் சுழற்றிய பிறகு, ஆரம்ப நிலைக்கு வந்தவுடன் மூச்சு விடவும். பல முறை செய்யவும். பயிற்சி: 8 1. நாற்காலியை வைத்துக் கொண்டு, இந்தப் பயிற்சி செய்யவும். அதாவது, பிடித்துக் கொள்ள ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? நாற்காலியின் பக்க வாட்டில் இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் வைத்து நின்று கொண்டு, நன்கு மூச்சிழுத்துக் கொள்ளவும். இடது கையால் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு, வலது காலை முன்புறமாக எவ்வளவு தூக்கி நேராக உயர்த்த முடியுமோ, அந்த அளவுக்கு உயர்த்தி, பிறகு