பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (எடை குறைக்கும் எளிய பயிற்சிகள்) உடலுக்கு எடை கூடிக்கொண்டே வருகிறபோது, உள்ளமும் குதூகலத்தால், உற்சாகமாக ஆடிக்கொண்டே வரும். எடையும் கூடி, உடலுக்கு ஏராளமான வலியும் வேதனையும் சதிராடுகிறபோது, சஞ்சலமும் சங்கடமும் சகஜமாகிப் போவதும் அன்றாடம் நடப்பதுதான். அதற்காக அவசர அவசரமாக ஆலோசனைகள் கலப்பதும், யார் எதிர்ப்பட்டாலும் அவர்களிடம் உரையாடிக் கொள்வதும், அவதிப்படுவோர் அடுத்தடுத்து செய்கிற காரியமாகி விடுகிறது. - வைத்தியரிடம் சென்றால், பட்டினி போடுங்கள் அதாவது விரதம் இருங்கள் என்பார், வேண்டும் என்றால் மாத்திரைகள் எழுதித் தருவார். வற்புறுத்திக் கேட்டால், உடற்பயிற்சிகள் செய்துபாருங்கள் என்பார். உடற்பயிற்சி என்றதும், முகம் சுளித்துக் கொள்கின்ற உல்லாசவாசிகளும், உதவாக்கரை பேர் வழிகளும் நிறைய பேர்கள் உண்டு. இவர்களின் சோம்பேறித்தனத்தைக் காசாக்கிக் கொள்ள காத்திருக்கும் தந்திர சாலிகளும் நிறையப் பேர்கள் உண்டு. 'நீங்கள் பேசாமல் நின்றால் போதும், எங்களின் எந்திரங்கள் உங்களுக்காக ஓடும், உழைக்கும், உங்கள் எடையைக் குறைக்கும். உங்கள் உடம்பை அழகுமயமாக ஆக்கும்' என்றெல்லாம் விளம்பரம் செய்து, படம்