பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 157 வியர்வை வெளியேறியதன் மூலம், உடல் எடை குறைந்தது போலத் தோன்றும். மீண்டும் தாகமெடுத்துத் தண்ணிர் குடித்தவுடன், இழந்த தண்ணிரின் அளவு ஈடுபெற்று, உடல் எடை பழைய நிலமைக்கு வந்து விடும். 3-வது படத்தைப் பாருங்கள். செயற்கை முறையான உடற்பயிற்சிகளைச் செய்யும் எந்திரம் இங்கும் உள்ளது. பயிற்சி செய்யவேண்டியவர், பதமாகக் குறிப்பிட்ட இடத்தில் வந்து படுத்துக்கொள்கிறார். கொழுப்பு குறைக்கப்பட வேண்டிய இடத்தில், மின் அணு சாதனத்தின் கருவிகள் பொருத்தப் படுகின்றன. மின்சாரத்தின் தூண்டுதல் மூலம், தசைகள் இயக்கப்படுகின்றன. தசைகள் ஊளைச் சதையாக இருக்கிறபோது, அவை அதிகமாக இயக்கப்படுவதால், அவை நன்றாக இயங்கும் அளவுக்கு ஊக்கு விக்கப்படுகின்றன. உற்சாகப்படுத்தப் படுகின்றன. என்றாலும், அந்த ஊளைச்சதை இயக்கத்தால், உடல் எடையில் குறைவு ஏற்படுவதில்லை. உடல் திற நிலையும் அதிகமாகி விடுவதில்லை. இதுவும், ஒரு மன சாந்தி தரும் முறையே என்கிறார்கள் உடற்பயிற்சி வல்லுநர்கள். படம் 4-ல் ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள். இதை சொனாபாத் அல்லதுடர்கிஷபாத் (Saயma bath and turkish bath) 6T6&TLITitã6t. -