பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 159 'உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்’ என்ற எனது நூலைப் படியுங்கள். உங்கள் ஆவலுக்கு தேவையானவற்றைத் தெளிவு படுத்தும். 'உபயோக முள்ள உடல் நலக்குறிப்புக்கள்' என்ற எனது இன்னொரு புத்தகத்தையும் நீங்கள் படிக்கிற போது, உங்களுக்கு உதவுகிற எளிய உடற்பயிற்சிகளும், நல்ல வழி காட்டிகளாய் அமையும். உடல் என்பது உழைக்கப் பிறந்த ஒரு சாதனமாகும். உடலுக்கு வேண்டியது உறுப்புக்களுக்கான இயக்கம்தான். உழைப்புதான் உறுப்புக்களை உறுதி படுத்துகின்றன. அதிகமான இரத்த ஓட்டத்தைத் தந்து உற்சாகம் ஊட்டுகிறது. அதிகமாகச் சுவாசிக்கச் செய்து உறுப்புக்களைத் தூய்மைப்படுத்துகிறது. உண்ணுகிற உணவை ரசித்துப் புசிக்க வழி வகை செய்கிறது. அதனால்தான் உழைப்பு என்பது வருமானத்துக் காகச் செய்யும்போது அது வேலை ஆகிறது. வயிற்றுப் பிழைப்புச் சாகச் செய்யும்பொழுது அது ஒரு தொழில்’ ஆகிறது. ஒரு சீரான இயக்கமாகிய உடல் உழைப்புத்தான், 'உடற் பயிற்சி ஆகிறது. உட்கார்ந்தபடி மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, சிறிது நேரம் அடக்கி வைத்துப் பிறகு மெதுவாக வெளியே விடுகிற செயல் உடற் பயிற்சி என்றாலும், அதற்குப் 'பிராணாயாமம்’ என்று பெயர்.