பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'விளையாட்டுத்துறை தந்தை' என்றும் பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்பட்ட டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத்துறை, தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுமையும் செலவிட்டார். விளையாட்டு, உடற்கல்வி, கவிதை, சிறுகதைகள், நாவல், சுய முன்னேற்ற நூல்கள் என 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டார். விளையாட்டுத் துறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளையாட்டுகளில் விருப்பத்துடன் பங்ககேற்கவும் உதவும் வகையில் விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழைத் தொடங்கி 25 ஆண்டுகள் நடத்திய பெருமைக்குரியவர். விளையாட்டு இசைப்பாடல்கள், உடற்பயிற்சிக்கான இசை ஒலிநாடா, ஓட்டப்பந்தயம் என்னும் திரைப்படத்தின் வாயிலாக விளையாட்டுக்களின் மேன்மையை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக விளையாட்டுத் துறையில் ஆய்வறிஞர் (பிஎச்.டி) பட்டம் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது மூன்று நூல்கள் தேசிய விருதும், ஒரு நூல் தமிழ்நாடு அரசின் பரிசிைைனயும் பெற்றுள்ளது.