பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 15 பிறவியின், பெரும் புனித வாழ்க்கையின் பேற்றைப் பெருமையுடன் அனுபவித்தார்கள்! எப்படி? எப்படி? எதற்காக உடற் பயிற்சி செய் கிறோம் என்ற கேள்வியின் விடையே இதில்தான் அடங்கிக் கிடக்கிறது! உடற் பயிற்சி என்பது உடலைப் பண்படுத்த: பதப்படுத்த இதப்படுத்த எழில்படுத்த, பண் பட்ட நிலத்தில் தான் பயிர் முளைக்கும். பலன்கிடைக்கும். பாழ்பட்ட நிலத்தில், பாறையில் என்ன கிடைக்கும்? பண்பட்ட உடல் என்றால், கசடுகள் நீங்கிய உடல் வளம்; எத்தகைய தட்ப, வெப்பங்களையும், இயற்கை யான வாழ்க்கை முறைகளையும் தாங்கிக்கொள்கின்ற உடலுறுதி; நோயினின்றும் எக்காலமும் நீங்கி இருக்கின்ற உடல் பலம் உள்ளதுதான். இந்த அரும்பணிக்காகத்தான் அகிலத்து மக்களை அறைகூவி அழைக்கின்றது உடற்பயிற்சி! மனித குலம் மகிமைபெற வேண்டுமானால், மனித குலம் புனிதம் அடைய வேண்டுமானால், மனித வாழ்க்கை இனிமை தர வேண்டுமானால், மனிதப் பிறப்பு மேன்மை கொள்ள வேண்டுமானால், அதற்கு ஒரே வழி உடற்பயிற்சிதான்.