பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 23


r ! 3. உடற்பயிற்சி எப்படி :

உதவுகிறது? உடற்பயிற்சி என்பது உடலியக்கந்தானே என்றால் உண்மைதான். ஆனால் அந்த உடலியக்கத்தில் வேறொன்றும் ஒத்துழைக்கிறது. அதுதான் சுவாசம் உடற் பயிற்சியின் ஒவ்வொரு இயக்கமும், ஏராளமான காற்றை இழுத்து வெளிவிடும் சுவாச முறையினை (Breathing) அடிப்படையாகக் கொண்டு, இணைந்து, கலந்துள்ளது. ஆகவே, உடற் பயிற்சி என்பது உறுப்புக்களின் இயக்கமும், அளவுக்குத் தேவையான காற்றை மூச்சிழுத்து விடுகின்ற இயக்கமும் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் நடக்கின்ற உத்தமமான செயலாகும். மூச்சிழுத்தல் என்பது எல்லோரும் எப்பொழுதும் செய்வதே. அது, நம்மையறியாமலேயே இரவும் பகலும் நடக்கின்ற ஒன்றுதான். அது நடந்தால் வாழ்வோம், முடிந்தால் நம் கதையும் முடிந்தது என்பதும் நமக்குத்