பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 31 அவரவர் மூடிய கை அளவே உள்ள இதயம், இரவு பகல் என்று காலம் பாராமல் உழைக்கிறது. ஒவ்வொரு தடவையும் இரத்தத்தை மகாதமணி வழியாக உடல் முழுதும் இறைக்கின்ற இதயம், வினாடியில் ஒரு பங்கு நேரந்தான் ஒய்வு எடுத்துக்கொள்கிறது என்று உரைப்பார்கள். ஒரு நாளைக்கு 100,000க்கு மேல் நாடித் துடிப்பை உண்டாக்குகின்ற அளவுக்கு இதயம் உழைக்கிறது. ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி, உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்ப எடுத்துக் கொள்கின்ற உழைப்பிருக்கிறதே. அது ஒப்பற்ற முயற்சிதான். உலகிலே இதுவரை எந்த எந்திரமும் செய்யாத அற்புத முயற்சிதான். இதயம் ஒரு முறை இறைக்கும்போது எடுத்துக் கொள்கிறசக்தியின் அளவானது, இரண்டு பவுண்டுள்ள டிா எடையை, தரையிலிருந்து 1 அடி உயரம் மேலே தூக்க எவ்வளவு சக்தி வேண்டுமோ அந்த அளவுக்கு மேல் இருக்கிறது என்பார்கள் விஞ்ஞானிகள். ஒரு நாளைக்கு இந்த இதயம் முழுதும் ஆற்றுகின்ற சகதியினைக் கணக்கிட்டுப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? 150 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதனை, தரையிலிருந்து 1000 அடி உயரம் தூக்க எவ்வளவு சக்தி தேவைப்படுமோ அந்த அளவு சக்தியை இதயம் செலவழிக்கிறது. இதயம் ஒரு முறை சுருங்கி, இரத்தத்தை வெளியேற்றும்போது, இரண்டு அவுன்சு அளவு