பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 33 இத்தகைய சக்தியுள்ள இதயத்தை நாம் பொன்னே போல் போற்றி, கண்ணே போல் காத்தால்தானே இன்பமாக வாழலாம். பிறந்த பயனை பேரின் பமாக அனுபவிக்கலாம். இதயத்திற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் இனி கேட்கலாம்! ஒரு நாளைக்கு 9 மணி நேரம் உழைத்து, 15 மணி நேரம் ஒய்வெடுத்துக் கொள்கிறது இதயம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து, எவ்வாறு என்று நாம் ஆராயவேண்டுவது அவசியமே! இதயம் சுருங்கி விரிந்து இயங்குவதை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். இதயம் சுருங்கி இரத்தத்தை வெளியேற்றுதல் (Squeeze), சுருங்கிய இதயம் முன்பு இருந்த நிலைக்கு விரிந்து வருதல் (Relazation); ஒய்வு பெறுதல் (Rest), இந்த மூன்றாவது பகுதி இருக்கிறதே; மற்ற இரண்டு பகுதிகள் எடுத்துக் கொள்கின்ற நேரத்தைவிட மிகக் குறைந்த நேரமாகும். ஒரு முறை இதயம் இரத்தத்தை இறைத்தால், அது உடல் முழுதும் ஒடக்கூடிய இயல்பான நேரம் 23 வினாடியாகும். அதாவது, சாதாரண உடல் நலம் உள்ளவர்களின் உடல் முழுதும் இரத்த ஓட்டம் ஒரு முறை ஓடிவர குறைந்தது அரைநிமிட நேரம் ஆகும் என்பது அறிஞர்கள் கூற்று. ஆனால், உடற்பயிற்சி செய்கின்றவரின் உடலில், உடல் முழுதும் இரத்த ஓட்டம் ஓடிவர எடுத்துக் கொள்கின்ற நேரம் 12 வினாடிகளாகும். அது எதைக்