பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற் பயிற்சிகள் 35 செல்களுக்குக் கொடுக்க, இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற உயிர்ச் சத்தை அழைக்கிறது. ஹீமோகுளோபின் என்ற உயிர்ச் சத்தோ, தங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் வல்லமை உடைய இரும்புச் சத்தைக் (Iron) கூவி அழைக்கிறது. இரும்புச் சத்தோ, தான் உண்டாக வேண்டிய உணவுப் பொருட்களை நம்மிடம் கேட்டு நிற்கிறது. உணவுதான் உடலுக்கு ஆதாரம். . உடல், உணவு தேவையென்று கேட்பதைத்தான் நாம் பசி என்கிறோம், பசி என்பது வேறொன்றுமில்லை. வயிற்றுக்குள்ளே வயிற்றுத் தசைகள் சுருங்கி சுருங்கி விரியும். உணவு இருந்தால் அதைப் புரட்டிப் புரட்டித் தள்ளும். வயிறு காலியாக இருக்கும்போது, தசைகள் புரள்வதால்தான் நமக்கு உணர்வு தோன்றுகிறது. -- - அதிலும், உடற் பயிற்சி செய்தவுடன் அதிகமாகப் பசிப்பதற்குரிய காரணம் என்னவெனில், உணவுப் பொருட்கள் உயிர் காற்றினால் எரிந்து, உடலைக்காக்கும், வளர்க்கும் சக்தியாக மாற்றப்படுவதினாலே தான், அதிலும் நல்ல பயிற்சி செய்த பிறகு, வயிறு பசிப்பதோடு, இதயம் சுறுசுறுப்பாகவும் இயங்குகிறது. அதற்கும் காரணம் உண்டு. ஓய்வாகவும் அமைதியாகவும் இருக்கின்ற நிலையை விட பயிற்சியால் உழைப்பைப் பெற்ற உறுப்புக்கள், அதிக உணவுச் சத்தையும், உயிர்க்காற்றையும் கேட்கின்றன. உயிர்ச்சத்தையும், உயிர்க்காற்றையும் எடுத்துச் செல்வது இரத்தம்தானே? இரத்தத்தை