பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உணவிலுள்ள சத்தையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்ற ஆற்றல் மிகுந்த ஜீரண உறுப்புக்களைத் தயார் செய்வதும் உடற்பயிற்சிதான். எதைத் தின்றாலும் ஜீரணமாகிவிடுகிறது. அடிக்கடி பசியெடுக்கிறது என்று உடற் பயிற்சி செய்பவர்கள் கூறுகின்றார்களே, அதற்குக் காரணம் என்ன? வயிற்றுப் பாகங்களின் வலிமையான அமைப்புதான் உழைப்புதான். (3) அன்றாட வாழ்க்கையை அழகுற நடத்துகின்ற ஆற்றலைத் தருகிறது. - உடல் உறுப்புக்களை எப்படியெல்லாம் இயக்கினால் இயங்கும், மயங்கும் என்றெல்லாம் உடற்பயிற்சிக்குத் தெரியும். அவ்வாறு ஏற்ற முறைகளில் எல்லாம் வளைவதால், நெளிவதால், உறுப்புக்கள் ஆண் மை பெறுகின்றன. மேன்மையடைகின்றன. இதனால், உடற் பயிற்சி செய்பவன் நிமிர்ந்து நிற்கிறான். கம்பீரமாக நடக்கிறான். தெளிவாகச் சிந்திக்கிறான். களைப்பில்லாமல் செயல்படுகின்றான். நாளெல்லாம் வருகின்ற களைப்பிலும் இளைப்பிலும் இருந்து தப்பித்துக் கொள்வதோடு, பிறருக்குப் பணிசெய்கின்ற பெருந்தன்மையையும் வளர்த்துக் கொள்கிறான். ஒரு குருடன் இன்னொரு குருடனை எப்படி வழி காட்டி நடத்திச் செல்ல முடியும்? ஒரு நோயாளி இன்னொரு மனிதனுக்கு எவ்வாறு பணி செய்ய முடியும்? ஆகவே, உடற் பயிற்சி செய்கின்ற ஒருவன் உடலுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும்,