பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நோய் வாய்ப்படும். அதனால் பலவிதத் துன்பங்கள் படையெடுக்கக் கூடும். இறுகிய தசைகள் உள்ள உடலில்தான் இறுகிய வளமை வாய்ந்த இதயம் இருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடவேகூடாது. பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஓயாமல் உறங்காமல் உழைக்கின்ற இதயத் தசைகளை, தொள தொளவென்று வைத்திருந்தால் யாருக்கு நஷ்டம் என்பதை இனியாவது நீங்கள் உணர வேண்டாமா? (5) உடலுக்கு வண்ணத்தையும் உரிய அழகையும் வழங்குகிறது. - உடலில் விரைவாக வளரக் கூடிய ஓர் அங்கம் தோல்தான். அதனால் தோல் உருவிலே பெரிதாக வளர்வதுமில்லை; என்றாலும் தோல் வளராமல் இருப்பதுமில்லை. தனக்குரிய, தேவையான எண்ணெய்ப் பசையை தானே தயார் செய்து கொள்கிறது. தனக்கு ஏற்படும் காயங்களைத் தானே ஆற்றிக் கொள்கிறது. வேண்டும். போது வெப்பத்தை உண்டாக்கிக் கொள்கிறது. வேண்டாதபோது குளிர்ச்சியை வருவித்துக் கொள்கிறது. இத்தனை வேலைகளை எழிலுறச் செய்கிறது தோல் என்றால், அந்தத் தோலை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்? தோலின் அடிப்பாகங்களில் தானே இரத்தக் குழாய்கள் இருக்கின்றன. தோலுக்குத் தேவையான இரத்தத்தைத் தருவதும் அவைகள் தானே! உடலில் உண்டாகும் கழிவுகளை வியர்வை மூலம் தோல் வெளியேற்றுகிறது. அப்பொழுது வியர்வை