பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நிலையில் தூய்மைப்படுத்தி, நோயகற்றும் நல்மருந்தாக வந்து நம்மை வாழவைக்கிறது உடற்பயிற்சி. நமது முன்னோர்களுக்கு உடலில் பலம் இருந்தது அதனால் அவர்கள் வலிமைமிக்க பஸ்கி, தண்டால், சூரியநமஸ்காரம் போன்ற கடினப் பயிற்சிகளையெல்லாம் செய்து வந்தனர். நம் கால இளைஞர்கள்தான்புல் தடுக்கிப் பயில்வான்களாக, ரோடுகளில் அழகு மேய்ந்து திரியும் காளைகளாக, காட்சியளிக்கின்றனரே! அவர்களுக்கு ஏற்ற முறையில் எளிய நிலையில்தான் இன்றைய பயிற்சி முறைகள் அமைந்திருக்கின்றன. ஆகவே எளிய முறையிலே வந்து வலியதோர் சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென்றுதான் உடற்பயிற்சி பாடுபடுகிறது. இன்னும் எத்தனையோ நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. நாம்தான் வலிய வருகின்ற சீதேவியை உதைத்துத் தள்ளுகின்றோம். நோயே வராமல் தடுக்கிறது. நோய் வந்து விட்டால் விரட்டுகிறது. உண்மை, உறுதி, ஊக்கம், உற்சாகம், உவப்பு, உடலுறுதி, உடல் வளம், உடல் பலம் அனைத்தையும் உலகுக்கு அளிக்கிறது. கலை, ஞானம், குலமானம், தொழில் நுணுக்கம் முதலியவற்றை வளர்க்கிறது. உடற்பயிற்சி, உடலைகாக்கும் அற்புதத் துணைவன் மட்டுல்ல; உடலை சீரான முறையிலே செதுக்கும் சிற்பி, அறிய முறைகளை எளிய வழியிலே கற்றுத் தரும் அறிவார்ந்த ஆசிரியர்; வைத்திய முறைகளால் கைவிடப்பட்ட நோய்களைக் கூட, வரிந்து கட்டிக்