பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 49 கொண்டு நோய்களைத் தீர்த்து வைக்கின்ற மருத்துவர்; தலைகள், நரம்புகள், மூட்டுகள் போன்றவற்றை ஒத்த முறையில் இயக்கி, உயர்ந்த முறையில் பாடுபட்டு, உடலுக்கு அழகைத் தருகின்ற உத்தம உழைப்பாளி. எனவே, உடலின் உள்ளும் புறமும் ஒளி பெறும் வண்ணம் கலையெழில் மின்னும் வண்ணம், தொழில் நலம் ஆற்றுகின்ற உடற் பயிற்சியை உண்மையிலே விரும்பி செய்தோர், உலக வாழ்க்கையை உயர்ந்த நிலையிலே துய்த்தவர்கள் ஆவார்கள். வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை உணவு, உடை, உறையுள். மனிதனுக்கும் இன்றியமையாத தேவை அழகு, ஆண்மை, ஆரோக்கியம். ஆகவே, பலர் பார்த்துப் பாராட்டி மகிழ்கின்ற அழகையும், பொதுநலத் தொண்டில் புகழ் வளர்க்கும் ஆண் மையையும், தான் நிம்மதியாக நோயின்றி வாழ்வதோடு, பிறரையும் வாழத் தூண்டும் ஆரோக்கிய நிலையையும் ஒவ்வொருவரும் அடைய வேண்டு மானால், உடற்பயிற்சியை செய்தே தீரவேண்டும். இதுதான் இறைவனின் எழுதாக் கட்டளையாகும். உடலில் ஆற்றல் உள்ளவனே உள்ளத்தில் ஆற்றல் மிக்கவனாக வாழ்கிறான். உள்ளத்தில் ஆற்றல் இருந்தவர்கள் தான் இறைவனைக்காணுகின்றார் என்று நம் முன்னோர்கள் உரைத்த மொழி உண்மைதான். உண்மை வழியே நன்மை பயக்கும். உறுதியுடன் செயல்படுவோம். உற்சாகமான வாழ்வைப் பெறுவோம்.