பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 51 இனி நீங்கள் பயிற்சியைப் படிக்கலாம், தொடங்கலாம், பயன் பெறலாம். கைகளை மேலே உயர்த்துதல்: கைகளைத் தூக்கி, (கைகள் முழுதும்) காதுடன் உராய்வதுபோல, தலையின் மேற்பகுதிக்குக் கைகள் நீளும் வரை நீட்டுதல். கைகளை முன்புறம் நீட்டல்: (வழிகாட்டி மரத்தில் பெயர் எழுதப்பட்ட குறுக்குக் கம்பம் போல) மார்புக்கு முன்பாக கைகளை நீட்டியிருத்தல், உள்ளங்கை தரையை நோக்கிப் பயிற்சிக்கு ஏற்றவாறு இருக்கலாம். கால்களை சேர்த்து வைத்தல்: இரு கைகளையும் ஒருங்கிணைத்து-முன் பாதங்களுக்கிடையில் சிறிது இடைவெளியுடன், மார்பை முன்னுக்கு நிமிர்த்தி, உடல் முழுவதையும் விறைப்பாக வைத்து, நிற்றல். இடுப்பில் கை வைத்தல்: கட்டை விரல் மட்டும் இடுப்பின் பின்புறம் செல்லல், முதல் நான்கு விரல்களும் முன் பகுதியில் இருக்குமாறு கை வைத்தல். குனிந்து கால்களைத் தொடுதல்: முழங்கால்களை வளைக்காமல், விறைப்பாகக் கால்களை வைத்து, கையால் தொட வேண்டும். பயிற்சி முறை 1 1. கால்களை இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு, மார்பை ஏற்றி நிமிர்ந்து நின்று, இரண்டு கைகளையும் உள்ளங்கை தொடையில் படும் படி வைத்திருந்து, ஒருகையை தலைக்கு மேலே விறைப்பாகத் துக்கி இறக்குதல், அதேபோல் மறு கைக்கும் செய்தல், (ஒவ்வொரு கைக்கும் 10 தடவை) (கையை ஏற்றும்போது