பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும்: உடற்பயிற்சிகள் 55 11. ஓடும் பாவனையில் கைகளை வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் ஓடுவது போலத் துள்ளிக் குதித்தல். (30 வினாடி). பயிற்சி முறை 2 1. கால்களை சேர்த்து, (தோள் மட்ட அளவு) பக்க வாட்டில் விறைப்பாக உயர்த்தியுள்ள கைகளிரண்டையும் மடக்கித் தோளைத் தொடும்படி கொண்டு வந்து, பின், முன் நிலைக்குக் கொண்டுபோக வேண்டும் (10 தடவை). (கைகளை மடக்கும்போது மூச்சிழுத்து, நீட்டும்போது மூச்சு விடவும்). 2. முடிந்தவரை கால்களை அகலப்பரப்பி, கைகளைப் பக்கவாட்டில் விறைப்பாக விரித்து நின்று, குனிந்து, வலது கையால் இடது கால் கட்டை விரலையும், பிறகு முன்போல நிமிர்ந்து நின்று, பின் குனிந்து, இடது கையால் வலது கால் கட்டை விரலையும் தொட வேண்டும். (முழங் கால்களை வளைக்ககூடாது) (10 தடவை) - - (மூச்சிழுத்துக் கொண்டு குனிந்து, நிமிர்ந்தபின் மூச்சு விடவும்). 3. அகலமாகக் கால்களை விரித்து, தலைக்கு மேலே கைகளை உயர்த்தி, பிறகு குனிந்து, விரல் நுனியால் நேரே உள்ள இரு கால்களின் கட்டை விரல்களையும் முழுங்காலை வளைக்காமல் தொட வேண்டும். (10 தடவை) (மூச்சிழுத்தல் முன் பயிற்சி போலவே)