பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 57 4. மார்புக்கு முன்னே கைகளை விறைப்பாக நீட்டி, (முழுதும் உட்காராமல்) முழங்காலை மடக்கிப் பாதியளவு உட்கார்ந்து, பின் எழுந்திருத்தல் (10 தடவை) (மூச்சிழுத்தபின் உட்கார்ந்து, நின்ற பின் மூச்சு விடவும்). 5. கால்களை அகலப் பரப்பி வைத்து, கைகளைப் பக்கவாட்டில் விரைப்பாக நீட்டி, ஒருபுறமாக வளைந்து வலது கையால் வலது காலைத் தொட்டு, பிறகு நிமிர்ந்து, இடது கையால் இடது காலைத் தொடவும் (30 தடவை). (மூச்சிழுத்தல் முன்னுள்ள 2-ம் பயிற்சி போல). 6. கைகள் தொடையின் முன்புறமாக இருக்க, கால்களை சேர்த்து நிற்கவும். இடதுகால் ஓரடி முன்னே சென்று வளைய, வலது கால் பின்புறம் சென்று விறைப்பாக நிற்க, அதே சமயத்தில் கைகள் இரண்டும் தலைக்கு மேல் உயர்ந்திருக்க-குதிக்கவும். மீண்டும் குதித்து முன் நிலைக்கு வரவும் (50 தடவை). 7. கால்களிரண்டையும் சேர்த்து வைத்து, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி வைத்திருக்க தன் இடது காலைத் தூக்கி, ஒரடி முன்னே - வைத்துக் குனிந்து, இரு கைகளாலும் முன்னிருக்கும் இடது காலைத் தொடவும். அதே போல் வலது காலுக்கும் செய்யவும். (ஒவ்வொரு காலுக்காகவும் 30 தடவை). (மூச்சிழுத்தபின் குனிந்து, நிமிர்ந்த பின் மூச்சு விடவும்). 8. மல் லாந்து படுத்திருக்கவும். கைகளை நேராகத் தலைக்குப் பின்னால் நீட்டியிருக்க, கால்களை