பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 61 8. மல்லாந்து படுத்துக்கொண்டு, கைகளைப் பக்க வாட்டில் விரித்து வைக்கவேண்டும். வலது காலைக் கொண்டுவந்து, இடது கையை (இடுப்பை வளைத்து, காலை மடக்காமல், கையை முன்புறம்கொண்டு வராமல்) தொடவும். இவ்வாறு மாறிமாறிச் செய்ய வேண்டும் (10 தடவை). - (மூச்சிழுத்து, காலால் கையைத் தொட்டு, முன் நிலைக்கு வந்ததும் மூச்சு விடவும்). 9. மல் லாந்து படுத்து, கைகளை மடக்கித் தலைக்கடியில் வைத்துக்கொள்ளவும். இரண்டு கால்களையும் இணையாக, விறைப்பாக நீட்டி, தரையிலிருந்து மெதுவாக மேலே உயர்த்தவும். கீழே தாழ்த்தும்போது தரையைத் தொடக்கூடாது (20 தடவை). (மூச்சிழுத்து, கால்களை உயர்த்தி, இறக்கியவுடன் மூச்சு விடவும்). 10. மல்லாந்து படுத்து, இடுப்பைக் கைகளால் தாங்கிப் பிடித்து, கால்களை செங்குத்தாக மேல் நோக்கி உயர்த்தவேண்டும். பிறகு (சைக்கிள் பெடலை சுற்று வதைப்போல) கால்களை வேகமாக சுற்றவேண்டும். (30வினாடி). குறிப்பு: பயிற்சிகளை எளிதாகப் புரிந்து, தொடர்ந்து செய்யவேண்டும் என்பதால்தான், மூன்று பிரிவாக்கித் தந்திருக்கிறோம். பயிற்சியில் பழக்கமும், பக்குவமும் பெறப்பெற, அதிக நேரம், அதிக அளவு செய்யவேண்டும். மூன்றாம் நிலைக்கு வந்தவர்கள், முதல் முறை பயிற்சிகளை செய்யவே கூடாது என்பதல்ல. முறையோடு தொடர்ந்து செய்தால் மனநிறைவோடு வாழலாம்.