பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 63 உடற் பயிற்சி என்பது உடலுக்கு மிகவும் அவசியமான காரியம். தேவைகளுள் தலையாயதாகத் திகழும் செய்முறைகள், விரும்பி ஏற்கப்படுகிற சுவையான செயல் வழியாகும். நமது உடல் படைக்கப்பட்டிருக்கிறது, பயன் படுத்தப்படுவதற்காக. செயல்களுக்காகப் பயன் படுகிற உடல் தான் , உழைக்கின்ற உடல்தான், உறுதியாக வளர்கிறது. வலிமையாக திகழ்கிறது. -- உழைக்காத உடலில் வளர்ச்சி குறைகிறது. வலிமை மறைகிறது. தோற்றத்தின் எழில் தேய்கிறது. பலமோ பாழாகிப் போகிறது. உறுப்புக்களும் நிலையில் நோக ஆரம்பிக்கின்றன. 'உடற்பயிற்சி செய்யாததால், நாங்கள் எதையும் இழந்து விடவில்லை. குறைந்துவிட வில்லை. நாங்கள் நன்றாக வாழத்தானே வாழ்கிறோம் என்று நகை முகத்தோடு பேசும் மனிதர்கள் உண்டு. நையாண்டி செய்பவர்களும் உண்டு. - - அவர்கள் வாழத்தான் வாழ்கிறார்கள் என்றாலும், ஓர் ண்மையை மறுத்துவிட முடியாது. மறைத்துவிட முடியாது. நீங்கள் உங்களால் செய்ய இயலுகின்ற, முடிகின்ற அளவு எதையும் செய்யமுடியாமல், திறமைக் குறைவாகவே காரியம் செய்கிறீர்கள் என்பது தான் அந்த - rat)MT 6N5)LD.