பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பெறுகின்றன. எலும்பு மூட்டுக்களின் செல்களோ இன்னும் திறமையில் பெருமை பெறுகின்றன. உடலில் ஏற்படுகின்ற செல்களின் வளர்சிதை மாற்றங்கள் (Metabolism) செழிப்படைந்து கொள்கின்றன. உடலில் கொழுப்புச் சத்து கரைந்து போகின்றன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து போகின்றது. உடலும் உடற்பயிற்சிகளும் உடலில் உள்ள, உள் உறுப்புக்கள், உடற்பயிற்சி யால் உயர்ந்த பலன்களைப் பெறுகின்றன. உடற்பயிற்சிகளைச் செய்கிற நேர அளவைப் பொறுத்தும், உடற் பயிற்சிகளின் தன்மைகளைப் பொறுத்தும், தசைகள் நல்ல வடிவும், வனப்பும், வலிமையும், வாளிப்பும் பெறுகின்றன. உறுப்புக்களுக்கு நெகிழ்வுத் தன்மை அதிகம் ஆவதுடன், நீடித்துழைக்கும் ஆற்றலும் நிறையவே கிடைக்கின்றன. தசைகளில், இதயத் தசையும் சிறப்பான ஒன்றல்லவா இதயம் தானே இரத்தம் இறைக்கும் எடுப்பான எந்திரம்! அந்த எந்திரம் அருமையாகவும், திறமையாகவும் செயல்பட, சிறப்பாகப் பணிபுரிய, உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உற்சாகம் ஊட்டு கின்றன. உண்மையாகவே துணைபுரிகின்றன. இந்த இதயத்தின் பணி எப்படி இருக்கிறது பார்த்தீர்களா!