பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடற்பயிற்சியால், இரத்த ஓட்ட செயலும், உயிர்க் காற்று இழுக்கும் வேலையும், சக்தி மிகுந்ததாக, சாதுர்யம் நிறைந்ததாக நடைபெற்றுக் கொள்கிறது. இதன் மூலம் நிறைய இரத்தத் தந்துகிகள் உருவாகி விடவும், உணவையும் உயிர்க்காற்றையும் செல்களுக்குக் கொண்டு போக, சீரான நிலைமைகளையும் செம்மை படுத்தும் வாய்ப்புக்கள் உருவாகிப் பெருகிவிடுகின்றன. இதனால், இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துக்கொள்ளும் அடைசலைக் குறைத்தும், மிகுதியானால் அழித்தும், கொழுப்புண்டாக்கும் கொடுமையான நோய்களை வேரறுக்கும் வேலையும் விமரிசையாக நடைபெறுகின்றன. பயிற்சிகள் சுவாச மண்டலத்தைப் பலப்படுத்து கின்றன. நுரையீரல்களின் மிகுதியாக உழைக்கும் ஆற்றலும் மேன்மை பெறுகின்றன. காற்றின் கொள் அளவு கூடுதல் பெறுகிறது. இதனால் நரம்பு மண்டலம் நிமிர்ந்த தோரணையை அடைகிறது. அவற்றின் ஒருங்கிணைக்கும் செயல்களும், உத்தரவுகளை ஏந்தி வரும் வேகமும் விரைவு பெறுகின்றன. - உடற்பயிற்சியின் உதவிகள்: 1. உடற்பயிற்சி செய்கிறவர்கள், எப்பொழுதும் நலத்துடனே வாழ்கின்றார்கள்.