பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 69 2. அவ்வாறு நிலைமாறி, நோய் வந்தாலும் கூட, நோயிலிருந்து விரைவாக விடுதலை பெற்று விடுகின்றார்கள். விரைவில் குணம் பெற்று. பழைய நிலையையும், பலத்தையும் மீண்டும் பெற்று விடுகின்றனர். 3. சீக்கிரம் களைப் படைந்து விடாமல், செயல்படும் நேரத்தை மேலும் மேலும் விரிவு படுத்தி, செயல்படச் செய்கிறது. 4. குறைந்த அளவு தேக சக்தியைப் பயன்படுத்தி, நிறைய வேலைகளைச் செய்யும் நேர்த்தியை நல்குகிறது. 5. தேகத்தில் ஏற்படும் திசுக்களின் தேய்மானம் மட்டுப்படுகிறது. வளர்சிதை மாற்றங்களில் குறைவான வகையே நடைபெறுகிறது. - 6. நன்றாக, நிம்மதியாக, ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் அரிய வசதியை வழங்குகிறது. 7. உடல் திறனை உற்சாகமாக வளர்த்து விடுகிறது. 8. தீய பழக்கங்களை நெருங்க விடாமல், திண்மையாக வாழ உதவுகிறது. 9. கம்பீரமாக வாழ்கிற மனோநிலையை அளித்து, கவர்ச்சியாகவும், களிப்போடும் வாழ உதவுகிறது.