பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா z - - - - - - - - - - - - - - 1. வாழ்க்கையின் | i எதிர்பார்ப்புகள் \ === === === === = ' தேவையும் எதிர்பார்ப்பும்: ஒவ்வொரு மனிதருக்கும், வாழ்வில் அன்றாட தேவைகள் இருக்கின்றன. தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் வசதிகளையும், வாய்ப்புக்களையும் கண்டு பிடித்து, காரிய மாற்றுவதே, ஒவ்வொருவரின் வாழ்க்கை பிரச்சினையாக அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையினால், எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் நிறைய வந்து விடுகின்றன. அவைகளும் அகலாத நிழலாகத் தொடர்ந்து நெட்டித் தள்ளுகின்றன. தேவைகளைத் தீர்த்துக் கொள்ள, எதிர்பார்ப்புக் களை நிஜப் படுத்திக் கொள்ள, வாழ்க்கைக்கேற்ற