பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 71 வாய்ப்புக்களைக் கண்டு பிடிக்க, வசதிகளைத் தேடிக் கொள்ள உண்மையாக உதவுவது (மனித) உடல்தான். அதை விட்டால் கதி ஏதும் இல்லையே! அதனால்தான், உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக உடல் இருக்கிறது என்று அறிவாளிகள் கூறுகின்றார்கள். அதற்கான மதிப்பைத் தந்து, பெருமையுடன் பராமரித்து, பேரின்பம் காணுகின்றார்கள். ஆகவே, எதிர்பார்ப்புகளை வெற்றிகரமாகப் பெற, உடல் உறுதியாக இருந்தால்தானே, எதிர்பார்த்ததைப் பெற முடியும். மகிழ முடியும்! உடலின் பலமே மனிதர் மூலதனம். பலஹீனம் மரணம் என்ற வாக்கியத்தை நம் வாழ்நாளில் மறந்து விடவே கூடாது. சோம்பலும் சுகவீனமும்: உழைப்பில் ஈடுபடாமல், 'சும்மா கிடப்பதே சுகம்’ என்று சோம்பேறிகள் எல்லோருமே நினைக்கிறார்கள். உழைப்பது கேவலம். உடலில் வேர்வை வர வேலை செய்வது தாழ்ந்தவர்களின் செயல் என்கிற அவர்களின் முற்பகல் சித்தாந்தம். அவர்களை பிற்பகலில் சித்ரவதை செய்கிறவைகளாக மாறி விடுகின்ற்ன. சும்மா இருப்பது சுகமில்லை. உழைப்பது, உடற்பயிற்சி செய்வதுதான் உண்மையான பூலோக சொர்க்கம். ஏனென்றால், உடல் என்பது உழைக்கப் பிறந்தது, உழைக்க உழைக்கத்தான், உடல் உறுப்புக்கள்