பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உறுதி பெறுகின்றன. அழகு, ஆற்றல், ஆண்மை, ஆரோக்கியம் என்கிற அனைத்து லாபங்களையும் பெறுகின்றன. ஆனால், சும்மா இருப்பவர்கள், மேலெழுந்த வாரியாக வேலை செய்பவர்கள், ஓர் இடத்திலே அமர்ந்து பணியாற்றுபவர்களுக்குத்தான், அதிகமான அளவில் சுகவீனம் வருகிறது. செயலற்று கிடப்பவர்கள் பெறுகின்ற சுக வீனங்கள் எங்கே எந்த அளவு இருக்கின்றன என்று ஒரு பட்டியலே போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். அந்தப் பட்டியலோ, பார்ப்போருக்கு உண்மை நிலையை உரைத்து விடும். வலியும், வேதனையும் எந்த அளவு எங்கே என்பதுதான் அந்தப்பட்டியல். தலைப்பகுதியில் 14 சதவிகிதம் கழுத்து தோள் பகுதியில் 24% கைகள் பகுதியில் 15% முதுகுப் பகுதியில் 57% Lîl6örL|pů LIGġluloo (Buttocks)19% முழங்கால், பாதப்பகுதியில் 29% வலிகள் பிறக்கின்றன. பெருந்துன்பத்தை விளை விக்கின்றன. 15 சதவிகிதம் உடல் பகுதிதான் நோயோ துன்பமோ அடையாமல் இருக்கின்றன என்பது தான் உண்மை நிலை.