பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 73 வேலையும் சக்தியும்: மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கைப் பிரச்சினையை, வயிற்றுப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள, ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு வேலைக்கும் உடல் சக்தி ஒவ்வொரு விதமாகத் தேவைப்படுகிறது. உழவுத் தொழில் போல மண்ணைத் தோண்டுதல், மிரம் வெட்டுதல் போன்ற வேலைகளுக்கு 10 சதவிகிதம் சக்தி வேண்டுமென்றால் தச்சு வேலை, போன்ற தொழிலாளர்களுக்கு 2 முதல் 7 சதவிகிதம், இப்படி ஆளுக்கு ஆள், அவரவர் ஈடுபடுகின்ற பணியைப் பொறுத்து அமைவதால், அவரவர் பணிக்கேற்பவே, உடற் பயிற்சியும் செய்திட வேண்டும். செய்தாக வேண்டும். ஆகவே, உங்கள் தேவைகள், எதிர்பார்ப்புகளுக் கேற்ப, உடல் உழைக்க வேண்டும் என்பதற்காக, உகந்த பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, அன்றாட வாழ்வுக் கடமைகளை சரிவர ஆற்றவேண்டும் என்கிற நிலைவேறு. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையுடன் முயற்சிக்கிற நிலைவேறு. அன்றாடக் கடமையாற்ற எளிமையான பயிற்சிகள் போதும். விளையாட்டுப் போட்டிக்கு, முறையான வலிமையான பயிற்சிகள் வேண்டும்.