பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இத்தகைய பயிற்சிகள், மூட்டுக்களில் தசைகளில் ஏற்படுகிற விறைப்பை மென்மைப்படுத்தி, அதிலே வழவழப்பான இயக்கத்தை ஏற்படுத்திச் செயல்படும் போது, சிரமம் தராமல், சுமுகமாக செய்திட உதவுகின்றன. ஆகவே, பாதிக்கப்பட்ட, பழுதுபட்ட மூட்டுக்களும் தசைகளும், இத்தகைய பயிற்சிகளால் இதம் பெறுகின்றன. சுகம் பெறுகின்றன. இசைக்கேற்ப, தாள லய எண்ணிக்கைக்கு ஏற்ப (Rhythmics) செய்யப்படுகிற உடற்பயிற்சிகள், உறுப்புக்களை நெகிழ்ச்சியும், வலிமையும் நிறைந்தன வாகவும் மாற்றி விடுகின்றன. 2. வலிமை தரும் பயிற்சிகள் (strength Exercises) இந்த வகைப் பயிற்சிகள், எல்லா நிலை மனிதர்களுக்கும் ஏற்றம் தரும் பயிற்சிகளாகும். வலிமை தரும் பயிற்சிகள், தசைகளுக்கு நல்ல வடிவத்தையும், சிறந்த விசைச் சக்தியையும் (Tone); அதன் மூலம் வலிமையையும் அளிப்பதுடன், பயிற்சி செய்பவர்களுக்கு பாங்கான தன்னம்பிக்கையையும் வளர்த்து விடுகின்றன. சுற்றுப்புற சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கு ஏற்ப, தேகம் தயாராகிக் கொள்ளவும், அவற்றை எதிர்த்துப் போராடவும், தேவைப்படுகிறபோது, கூடுதலான சக்தியையும் கொடுக்கக் கூடிய அளவில் உடலைத் தயார்ப்படுத்தி விடுகின்றன.