பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 77 ஏதாவது ஒரு கனமான பொருளைத் தூக்க நேர்கிறபோது, ஏதாவது வண்டியைத் தள்ள நேர்கிறபோது, அந்த நேரத்தில் மூட்டுக்களும், உள் உறுப்புக்களும், பிடிப்பு இல்லாமல் பலத்தோடு பணியாற்ற, இத்தகைய வலிமைப் பயிற்சிகள் உதவுகின்றன. - கடின உழைப்பு உழைக்கின்றவர்களுக்கோ, இப் பயிற்சிகள் மிகவும் உதவுகின்ற ஆற்றல் கொண்டவையாக விளங்குகின்றன. குறிப்பிட்ட தசைப்பகுதிகளை அடிக்கடி உபயோகப்படுத்துகிற பொழுது தான், இப்பயிற்சிகள் வலிமையை மிகுதியாக்கித் தருகின்றன. இரும்புக் குண்டு எறிதல் எனும் போட்டி நிகழ்ச்சி; நீச்சலில் பல வகையான நீச்சல் முறைகள்; மல்யுத்தப் போட்டிகள். இவை தவிர, எடைப் பயிற்சிகள் (Weight Training). அவற்றில் எடையுடன் உட்கார்ந்து எழுதல், துள்ளிக் குதித்தல், எடையைத் தலைக்கு மேலே உயர்த்துதல் போன்ற பயிற்சிகள் நல்ல பலன்களைத் தருகின்றன. 3. இதய நுரையீரல் பயிற்சிகள் - இதயத்தின் இரத்தம் இறைக்கும் ஆற்றல்; துரையீரல்களின் பிராணவாயுவைப் பெறும் ஆற்றல் மிகுதியாக உதவுகின்ற பயிற்சிகளே, இதய நுரையீரல் பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.