பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த இரண்டு உறுப்புக்களும் செயலில் வலிமை பெறுவதால், நல்ல உடல் நலமும், தரமான திறமான உடலும் ஒருவரால் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் பல பயன்களைப் பெற முடிகிறது. தனி ஒருவராக நடத்தல், மெதுவாக ஓடுதல், வேகமான ஓட்டம், கயிறு தாண்டிக் குதித்தல், நீச்சல் போன்றவை ஒரு பிரிவு. சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டுக்கள்-கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், போன்றவை அடுத்த பிரிவு. இந்த இரண்டு பிரிவுப் பயிற்சிகளுமே, இதயத்தின் பணியை துரிதப்படுத்தி, தூய்மைப் படுத்தி, திறமுடைய தாக மாற்றுகின்றன. அதிகமான பிராணவாயுவை நுரையீரல்கள், தங்களுடைய காற்றுப்பைகளில் நிறைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அடிப்படையாய் அமைந்துள்ள உடலின் செல்கள் செழிப்பு பெறுகின்றன. வேண்டாத கழிவுப் பொருட்கள், விரைவாக வெளியேற்றப்படுகின்றன. மூன்றுவகைப் பயிற்சிகளைப் பார்த்தோம். இந்தப் பயிற்சிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன? இயக்கப்படும் முறைகள் (Methods) எவ்வாறு என்பதையும் இனி, விளக்கமாகக் காண்போம்.