பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 99. உடலழகுப் பயிற்சிகள் (BODY BUILDING EXERCISES) இந்தப் பயிற்சிகளைப் படிக்கும் வாசகர்கள், உடனே ஆர்வம் கொண்டு, பயிற்சிகளை செய்ய தொடங்கி விடுவார்கள். உண்மைதான். நாம் இங்கே கூற இருக்கும் பயிற்சிகளை உலகத்தில் ஆணழகர்களாக, ஆற்றலும், வலிமையும் மிக்கவர்களாக மிளிர்கின்றவர்கள் செய்கின்ற பயிற்சிகள்தாம். விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி, அல்லது மேஜையில் தங்கள் பணியைத் தொடரும் அலுவலகர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அனுசரனையுடன் உதவுகின்ற பயிற்சிகளாகவே இவைகள் உதவும். உற்சாகப்படுத்தும். உடலழகுப்பயிற்சிகள், உடல் வலிமையை வளர்த்து விடுகின்றன. உடலுக்கு உயர்ந்த தோற்றத்தை வழங்குகின்றன. பிறர்பார்த்துப் பெருமையுடன் பேசும் கவர்ச்சியைக் கூட்டி வருகின்றன. இப்படிப்பட்டப் பயிற்சிகளை எந்த வயதில் ஆரம்பிக்கலாம் என்ற கேள்வி எழுகிறதே! எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம். ஆனால் உடல் நன்கு வளருகின்ற இளம் வயதிலேயே இந்தப் பயிற்சிகளை ஆரம்பித்தால், இன்னும் எழுச்சியைப் பெறலாம். வளர்ச்சியைப் பெறலாம். மகிழ்ச்சியையும் பெறலாம்.