பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 1 O1 பயிற்சிகள் செய்யுமிடம், பயிற்சி அரங்கமாகவும் இருக்கலாம். அல்லது வீட்டில் ஓர் அறையாகவும் இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்யுமிடம் வெளிச்சம் உள்ளதாக, காற்றோட்டம் இருப்பதாக, நல்ல இடப்புழக்கம் இருப்பதாக அமைந்திருப்பது நல்லது. செய்கிற பயிற்சிகள் சீராக, சரியாக இருக்கின்றதா என்று தெரிந்து கொள்ள, ஒரு கண்ணாடி இருப்பது நல்லது. - - உணவு உண்ட பிறகு, உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டலாம். ஆனால் அவசரப்படக் கூடாது. ஆத்திரப்படவும் கூடாது. தேவையான அளவு தான் தேகத்திற்குப் பயிற்சிதர வேண்டும். இல்லையென்றால், தசைக் காயம், தசைச் சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவை ஏற்படக் கூடும். இந்தப் பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களும் செய்யலாம். தசைத் திரட்சி ஏற்பட்டு விடுமோ என்று பெண்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தசைகள் உருண்டு திரண்டு, கட்டாக ஆண்களுக்கு வரும். டெஸ்டோஸ் டிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் இருப்பதால்தான். பெண்களுக்கு இந்த ஹார்மோன் சிறிதளவு இருப்பதால், தசைகள் திரண்டு விடாது.