பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய குளிர் பிரதேசமாக இருந்தால், உடல் வெப்பம் காக்கின்ற உடைகளை அணிந்து கொள்ளலாம். உடல் வெப்ப நிலையில் இருக்கிறபோது, உறுப்புக்கள் பதமாக இருப்பதுடன், விறைப்புத் தன்மை இல்லாமல் பயிற்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். இனி பயிற்சி பற்றிப் பார்ப்போம். எடைப் பயிற்சி என்பது, வெறுங்கையால் பயிற்சிகளைச் செய்யாமல், சிறிதளவு எடைகளை வைத்துக் கொண்டு, பல முறை தொடர்ந்து செய்வது. குறைந்த எடை அதிக முறை. அதாவது அதிக எண்ணிக்கை. குறைந்த நேரம் 15 நிமிடம், அதிக நேரம் 60 நிமிடம் கூட ஆகலாம். எடைப் பயிற்சி சாதனங்கள் படத்தைப் பாருங்கள் 6 பயிற்சி சாதனங்கள் இருக்கின்றன. 1. Ergol– gröślů Luustyöálssir (Barbell Exercises) நீண்ட கம்பி ஒன்றின் இருபுறமும், எடைத் தட்டுக்களை (Discs) சம எண்ணிக்கையில் வைத்து பயிற்சி செய்ய உதவுவது, குறைந்த எடைத்தட்டு 1 பவுண்டு, 2 பவுண்டு, 2 1/2 பவுண்டு என வைத்துக் கொண்டால், எடைகளை அதிகரித்துக் கொள்கிறபோது வசதியாகவும், கஷ்டமில்லாமலும் இருக்கும். இது, உடல் முழுமைக்கும் நல்ல பலன் அளிப்பதாகும்.