பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 105 இனி பயிற்சி ഗ്രങ്ങതുടങ്ങണ பார்ப்போம். 1 அ. இரண்டு கால்களையும் சுமார் 15 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல் வைத்துக்கொண்டு, எடை ஏந்தியின் முன்புறம் முதலில் நிற்க வேண்டும். நிற்கும் முறை: முதுகை நன்றாக நிமிர்த்தி இருத்தி மார்பு மற்றும் தலையை நேராக நிமிர்த்தி வைத்து நிற்க வேண்டும். முழங் கால க ைள இயல்பாக மடித்து முன்புற மாகக் குனிந்து எடை ஏந்தி யின் கம்பியை இருகை களால் பற்ற வேண்டும். எடைத் தட்டுக்கள் உள்ள இறுதிப் பகுதியிலிருந்து சரியாக இருபுறமும் அளவு எடுத்துக் கொண்டு, அந்த இடத்தில்தான் பற்றிப்பிடிக்க வேண்டும். (படம் பார்க்க). பிடிக்கும்போது, விரல் மூட்டுக்கள் எடை ஏந்தியின் வெளிப்புறம் இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். தோள்களின் அகல அளவுக்கு கைப்பிடி இருப்பது போல் வைத்திருப்பதுதான் பயிற்சியின் ஆரம்ப நிலையாகும், மற்ற எல்லாப் பயிற்சிகளுக்கும் இதே பிடியைத்தான் பின்பற்ற வேண்டும்.