பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 ΟΘ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1. ஆ. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு கால்களை விறைப்பாக நிமிர்த்தி, பிடித்திருக்கும் எடை ஏந்தியை (கம்பியை) மேற்புறம் நோக்கிக் கொண்டு போய், மார்புக்கு சற்றுமேலே தாழ்வாய் (Chin) வரை ஏற்றி, வைத்துக் கொள்ளவும். 6T60) L ஏந்தியை மார்புக்கு மேலே பிடித் திருக்கிற போது, கைகள் மடிந்து, நேராக இருப்பது போல் வைத்துக் கொள்ள வும்: உள்ளங்கைப்புறம், முன்புறத்தைப் பார்த்திருப் பது போல, கம்பியைப் பிடித்திருக்கவும், பிறகு மூச்சு விடவும். குறிப்பு: இப்பயிற்சியை முதன் முதலாகச் செய்கிற ஆரம்ப நிலையாளர்கள், கீழே இருக்கும் எடை ஏந்தியைத் தூக்கிக் கொண்டு வந்து,தாழ்வாய் வரை பிடித்து வைத்திருக்கும் முறையில் பழகிக் கொள்ள வேண்டும். இந்த முறையை சரியாகத் தூக்குதல் என்னும் அர்த்தம் தருகிற ஆங்கிலத்தில், CLEAN என்று கூறுவார்கள். 1இ. பிறகு, மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு, தலைக்கு மேலே, கைகள் எவ்வளவு உயரமாக நிமிர்ந்து