பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 1 Ο7 இருக்க முடியுமோ, அந்த உயரத்திற்கு எடை ஏந்தியைத் தூக்கி உயர்த்தவும். சிறிது நேரம் வைத்திருந்த பிறகு, மீண்டும் மார்பு பகுதிவரை இறக்கி வந்து, அடக்கிய மூச்சை வெளியே விடவும். இதுபோல் மார்புக்கும் தலைக்கும் மேலே கை உயரத்திற்கும் 6T60) L ஏந்தியை 10 தடவை ஏற்றி இறக்கி, பயிற்சி செய்யவும். இனி 2வது எடை ஏந்திப் பயிற்சியைக் கவனிப்போம். 2 அ. இந்தப் படத்தைப் பாருங்கள். மார்புக்கு முன்புறம் எடை ஏந்தியை வைத்திருந்தது போல, இந்தப் பயிற்சியில், கழுத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ளது போல, எடை ஏந்தியைக் கழுத்தின் பின்பகுதியில் வைத்திருப்பதுதான். ஆரம்ப நிலையாகும்.