பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கால்களை இயல்பாக நிற்பது போல, அகலமாக விரித்து வைத்து நின்று கொண்டு, முழங்கைகள் முன்புறமாக நீண்டு வந்து, எடை ஏந்தியைப் பிடித் திருப்பது போல வைத் திருப்பது முதல் நிலை. 2 ஆ..இப்பொழுது நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கைகளுக்கு பலத்தைக் கொடுத்து, (பின்புறமாகவே) தலைக்கு மேலே எடை ஏந்தியை கைகள் நீட்டும் உயரத்திற்கு மேலே தூக்கி நிறுத்தவும். சிறிது நேரம் எடை ஏந்தியைப் பிடித்திருந்து விட்டு, மீண்டும் கழுத்தின் பின் பகுதியில் கொண்டு வந்து வைத்த பிறகு, அடங்கிய மூச்சை வெளியே விடவும். இந்தப் பயிற்சியை 10 தடவை செய்யவும்.