பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 1 O9 குறிப்பு: கழுத்தின் பின்புறத்திலிருந்து எடைக் கம்பியை மேலே தூக்கும்போது, பின் தலைப்பகுதியில் இடித்துக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உண்டு. நிதானமாக கவனமாகச் செய்யவும். மூன்றாவது பயிற்சி முறை: 3 அ. கால்களை அகலமாக வைத்து, விறைப்பாக முதலில் நிற்கவும். தோள் அகலத்திற்கு இருப்பதுபோல, குனிந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். உள் ள ங் ைக க ள் முன்புறம் பார்த்திருப்பது போல, பிடிக்கவும். இப்பொழுது எடைக் கம்பியானது, கைகள் முழு நீளம் நீண்டிருக்கும் இடத்தில், அதாவது தொடைக்கு மேற்பகுதி யில் இருப்பதுபோல், பிடிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆ.நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, முழங்கைகள் மார்புப்புறம் வருவதுபோல் மடக்கி, எடைக் கம்பி மார்புக்கு வருவதுபோல் கொண்டு வரவும்.