பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 111 கால்கள் விறைப்பாகவும், முதுகுப் பகுதியை வளைத்து முன்புறம் வருவது சரியான கோணத்தில் இருப்பதுபோலவும் இருக்கும். இப்பொழுது நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். 4 ஆ. குனிந்திருக்கும் அதே நிலையில் (Position) உடலை வைத்துக்கொண்டு, கீழே இருந்த எடை ஏந்தியை மார்புப் பக்கத்திற்குக் கொண்டு வருவது போல, தூக்கி உயர்த்தவும். - சிறிது நேரம் அதே நிலையில் பிடித்திருந்து விட்டு, மெதுவாக முதல் நிலைக்குக் கொண்டு வந்த பிறகு, மூச்சை விடவும். இது போல் 10 முறை தொடர்ந்து செய்யவும் எடை ஏந்தியைக் கொண்டு, இன்னும் பல வகையான பயிற்சிகளைச் செய்ய முடியும். மேலே கூறியப் பயிற்சிகள் ஆரம்ப நிலை தான். முதலில் எடைகளைக் குறைவாக வைத்துக் கொண்டு செய்யவும். பயிற்சியில் செழுமையும், பளு தூக்குதலில் திறமையும் வளர்வதை அறிந்து கொண்டு, எடைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.