பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எஸ்.செல்லையா

11


தமிழாசிரியர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நொதித்து எழுந்தனர்.

பயந்துபோன தமிழாசிரியர், தன் வார்த்தை ஜாலத் தினால் வேறுவிதமாகத் திசைதிருப்பத் தொடங்கினார்.

காமர்ஸ் மாணவர்கள் என்று நான் சொல்லவில்லை. நான் பொதுவாகச் சொன்னேன் என்றார். அப்படி யென்றால் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எல்லாரும் காமுகர்களா என்று கோஷம் போட்டு கொடிபிடித்து கல்லூரியையே “உண்டு, இல்லை” என்று ஆக்கி விட்டார்கள்.

பயந்து போன தமிழாசிரியர் எங்கோ போய்ப் பதுங்கிக் கொண்டார். அவரது வார்த்தை ஜாலம் எடுபடாமல் போயிற்று. சனிபிடித்த அவரது நாக்கு ஒரு சரித்திரமே படைத்துவிட்டது.

பல நாட்கள் நடைபெற்ற ஸ்டிரைக் அவருக்கு எதிராகப் பயங்கரமாக மாறியதால், அவர் கல்லூரிப் பணியிலிருந்து ஒர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக மாற்றப்பட்டார். இங்கே இவரது வார்த்தை அவரை வாழவைக்கவில்லை.

ஆகவேதான், வார்த்தைதான் வாழ்க்கையாக வ்டிவெடுக்கிறது என்பதைச் சொல்ல வந்தோம்.

வாய் என்றால் வழி என்று அர்த்தம். நம் உடலிலே 'மூன்று வாய்கள் இருக்கின்றன. மலங்களை வெளியேற்றும் வாய். அது எருவாய். ஒன்று மக்களை உருவாக்கும் வாய். அது கருவாய். மனங்களை வெளிப்